ரஷ்யா,சீனா, மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள்
ரஷ்யா,சீனா, மற்றும் ஈரான் இணைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளையம் 2026 பயிற்சியை தொடங்கியுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளையம் 2026
ரஷ்யா,சீனா, மற்றும் ஈரான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து ஹார்முஸ் நீரிப் பகுதியில்(Strait of Hormuz) தீவிர கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் உதவியாளர் நிகோலாய் பத்ருஷேவ், கடல்சார் பாதுகாப்பு வளையம் 2026 செவ்வாய்க்கிழமை தொடங்கியதாக அறிவித்துள்ளார்.

இந்த பயிற்சி, ராணுவ கூட்டு பயிற்சி மட்டுமின்றி, புவிச்சார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு வளையம் 2026-யின் முதற்கட்டமாக ஈரான் மற்றும் ரஷ்ய படைகள் தங்களது போர் ஒத்திகை பயிற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
போர் கப்பல்களின் விவரம்
ஓமன் வளைகுடாவில் நடைபெறும் இந்த போர் ஒத்திகை பயிற்சியில் ரஷ்யாவின் ஸ்டோய்கி(Stoikiy) என்ற பால்டிக் போர்க்கப்பல் கலந்து கொண்டுள்ளது.

அத்துடன் அல்வந்த்(Alvand) மற்றும் ஷாஹித் சையத் ஷிராஸி(Shahid Sayed Shirazi) போர்க்கப்பல்களும் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.
இந்த கப்பல்கள் இணைந்து பாசெக்ஸ் சுழற்சிப் பயிற்சியினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |