ஈரானுடன் கைகோர்க்கும் ரஷ்யா... மேற்கத்திய நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தும் தகவல்
கடந்த ஆண்டு வடகொரியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்ட ரஷ்யா, தற்போது ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேற்கத்திய நாடுகளுக்கு கவலையை உருவாக்குவதாக அமைந்துள்ளது.
ஈரானுடன் கைகோர்க்கும் ரஷ்யா...
இன்று, ஜனவரி மாதம் 17ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, ரஷ்யாவும் ஈரானும் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.
பாதுகாப்பு தொடர்பிலான அந்த ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஒரு நாட்டுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், மற்ற நாடு உதவிக்கு வரவேண்டும்.
ஏற்கனவே வடகொரியாவுடன் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது ரஷ்யா.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக வடகொரியா தன் வீரர்களை இறக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதை ரஷ்யாவும் வடகொரியாவும் மறுத்தன. ஆனால், சமீபத்தில் வடகொரிய வீரர்கள் இருவரை உக்ரைன் கைது செய்துள்ளதாக கூறியுள்ள விடயம், வடகொரியா ரஷ்யாவுக்கு உதவுவதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
தற்போது ஈரானுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலையில், ரஷ்யாவுக்கு உதவியாக ஈரானும் களமிறங்கும் என்பதால் மேற்கத்திய நாடுகள் கவலை அடைந்துள்ளன.
இந்த ஒப்பந்தம் யாருக்கு எதிரானது?
இந்நிலையில், எங்கள் ஒப்பந்தம் யாருக்கும் எதிரானதல்ல என்று கூறியுள்ளார் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சரான Sergei Lavrov.
ஏற்கனவே, ஈரான் ரஷ்யாவுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொடுத்து உதவுவதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன.
அதை ரஷ்யாவும் ஈரானும் மறுத்துவந்த நிலையில், தற்போது இரு நாடுகளும் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தால் அவை ஒன்றுக்கொன்று உதவுவது உறுதி செய்யப்பட உள்ளது.
ஈரான் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொடுக்கும். பதிலுக்கு ரஷ்யா ஈரானுக்கு தனது தொழில்நுட்பத்தைக் கொடுக்கும்.
ஆக, மேற்கத்திய நாடுகளின் கவலை நியாயமானதே.
இதற்கிடையில், தாங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்துக்கும், அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ள ரஷ்யா, இரண்டும் தற்செயலாகத்தான் ஒரே நேரத்தில் நிகழ்வதாக தெரிவித்துள்ளது.
ஆனால், உண்மையில், உலக நாடுகளை அமெரிக்கா வழிநடத்தும் விடயம் வலுவிழந்துவருவதாக ரஷ்யா கருதுகிறது.
மேற்கத்திய ஏகாதிபத்தியமும், அமெரிக்காவின் வழிநடத்துதலும் இல்லாத, அதிகாரம் வெறும் இரண்டு நாடுகளிடம் மட்டுமே இல்லாத ஒரு உலகை உருவாக்கவேண்டும் என புடின் அடிக்கடி கூறுவதுண்டு.
அதற்கான தனது முயற்சிகள் பலனளிப்பதாக காட்ட விரும்புகிறார் புடின்.
அதற்காகத்தான் முதலில் வடகொரியாவுடன் ஒப்பந்தம், தற்போது ஈரானுடன் ஒப்பந்தம்.
அப்படியிருக்கும்போது, மேற்கத்திய நாடுகள் கவலைப்படாமல் வேறென்ன செய்வது?
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |