ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரஷ்யாவில் நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை கம்சட்கா தீபகற்பத்தின் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 6.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகள் படி, இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காலை 9.51 மணி அளவில் பதிவாகியுள்ளது.
கிட்டத்தட்ட 1,87,000 மக்கள் வசிக்கும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் நகரில் இருந்து சுமார் 185 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6.6 அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா அல்லது பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |