உக்ரைன் மேயரை கடத்தி சென்ற ரஷ்ய ராணுவம்: பரபரப்பு காட்சிகள்
ரஷ்ய படைகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால் மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை 10 நபர்கள் கொண்ட ரஷ்ய ராணுவ படை கடத்தி சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தனது படையெடுப்பை மூன்றாவது வாரமாக உக்ரைனில் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது ரஷ்ய ராணுவ படையால் உக்ரைனின் மெலிடோபோல் நகர் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரஷ்ய ராணுவத்திடம் மெலிடோபோல் நகரை சரணடைய வைப்பதற்கு ஒத்துழைப்பு தர மறுத்த அந்த நகரின் மேயர் இவான் ஃபெடோரோவை அவசரகால மையத்தில் இருந்து 10 நபர்கள் கொண்ட ரஷ்ய ராணுவ குழுவால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
⚡️Zelenskyy: The kidnapping of the mayor of #Melitopol is a war crime against democracy. I assure you that 100% of people in all democratic countries will know about it, and the actions of the #Russian occupiers will be equated with those of ISIS terrorists.
— NEXTA (@nexta_tv) March 11, 2022
இது தொடர்பாக பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, உக்ரைன் மக்களை துணிச்சலுடன் பாதுகாத்து வந்த மேயர் இவான் ஃபெடோரோ ரஷ்ய ராணுவ வீரர்களால் கடத்தப்பட்டுள்ளார். 100 சதவிகிதம் ஜனநாயகத்தை கடைபிடிக்கும் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது தெரியும்.
ரஷ்யா ஜனநாயத்திற்கு எதிராக உக்ரைனின் உள்ளூர் அதிகாரியை அவரது பதவியில் அகற்ற முயற்சித்திருப்பது ரஷ்யாவின் அடுத்தகட்ட பயங்கரவாதத்தை எடுத்துரைக்கிறது. மேயர் இவான் ஃபெடோரோ கடத்தி இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான மிகப்பெரிய போர் குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய ராணுவ வீரர்களின் இந்த செயல் ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயல்களோடு ஒத்துப்போவதாக உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.