போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பகுதியில் நடந்த இரவுநேர வான் தாக்குதல்: 22 பேர் கொலை!
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்த சுமி பகுதியில் ரஷ்ய நடத்திய இரவு நேர வான் தாக்குதலில் 22 பொதுமக்கள் இறந்துள்ளதாக அந்த பிராந்தியத்தின் நிர்வாக தலைவர் Dmytro Zhyvytskyy குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து 14வது நாளாக தாக்கிவரும் நிலையில், இந்த தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இதனால் ரஷ்யா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக செர்னிஹிவ், சுமி, கார்கிவ், மரியுபோல் மற்றும் சபோரிஜியா ஆகிய பகுதிகளில் humanitarian corridors எனப்படும் போர் நிறுத்த பகுதியை ரஷ்யா அறிவித்தது.
Sumy, #Ukraine after the night #attack . Isn’t better the #peace instead of the #War ? pic.twitter.com/zMI9K8Txxr
— Svitlana (@Svitlan07715655) March 8, 2022
இதுவரை ரஷ்யா அறிவித்த தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பில், நேற்று (sumy)சுமி பகுதியில் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பே மக்களை முதல்முறையாக எந்த பாதிப்பும் இல்லாமல் வெளியேறிய ஒத்துழைப்பு தந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் , நேற்றிரவு சுமி பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 22 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உக்ரைனின் வடகிழக்கு நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட ரஷ்ய வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அந்த பிராந்தியத்தின் நிர்வாக தலைவர் Dmytro Zhyvytskyy குற்றம்சாட்டியுள்ளார்.
⚡️ Russian air strikes kill 22 people in Sumy overnight on March 8.
— The Kyiv Independent (@KyivIndependent) March 9, 2022
Head of Sumy regional state administration Dmytro Zhyvytskyy said that three children were among those killed in the northeastern city.
இதனிடையே உக்ரைனின் சுமி பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் humanitarian corridors எனப்படும் போர் நிறுத்த பகுதியை ரஷ்யா அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.