சீறிப்பாய்ந்த 172 ரஷ்ய ட்ரோன்கள்: உக்ரைன் இராணுவத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரஷ்யா நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல்
வெள்ளிக்கிழமை உக்ரைனிய நிலப்பரப்பை குறிவைத்து ரஷ்ய ராணுவம் முன்னெடுத்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிய ஆயுதப் படைகளின் அறிக்கைகள் படி, கிட்டத்தட்ட 175 வான்வழி ஆயுதங்கள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
Shahed, Gerbera மற்றும் Italmas உட்பட பல்வேறு வகைகளை சேர்ந்த 172 ட்ரோன்களும், பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஏவப்பட்ட 172 ட்ரோன்களில் 147 ட்ரோன்களை உக்ரைனிய பாதுகாப்பு படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக உக்ரைன் ராணுவத்தின் டெலிகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்காண்டர்-M ஏவுகணையும் கிட்டத்தட்ட 20 ட்ரோன்களும் உக்ரைனின் வெவ்வேறு பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் ஏதேனும் உயிரிழப்புகள் மற்றும் பிற சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |