ஒரே இரவில் 188 டிரோன்களைக் கொண்டு உக்ரைனை தாக்கிய ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா அதிகபட்சமாக 188 டிரோன்களைக் கொண்டு ஒரே இரவில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுவரை ஒரே தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட டிரோன்களின் எண்ணிக்கையில் இது மிகப்பெரியது என உக்ரைன் விமானப்படை கூறியுள்ளது.
தாக்குதல்கள் 17 பகுதிகளை இலக்காக கொண்டு நடைபெற்றன. இதில் குடியிருப்பு கட்டிடங்கள், தேசிய மின் விநியோக அமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்தன.
பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல், கடந்த சில மாதங்களாக ரஷ்யா தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நெருக்கடிமிக்க தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.
உக்ரைன் தலைநகர் கீவின் மீது செய்யப்பட்ட இந்த தொடர்ச்சியான டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மக்களிடம் மன உளைச்சலை அதிகரித்துள்ளன.
டொனெட்ஸ்கில் ரஷ்யாவின் முன்னேற்றம்
டொனெட்ஸ்க் பகுதியின் மையத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது.
அமெரிக்க ஆய்வு நிறுவனமான Institute for the Study of War கூறுவதன்படி, உக்ரைனின் பாதுகாப்பு முற்றிலும் உடைந்து விடுவதற்கான ஆபத்து எதுவும் இல்லை, எனினும், ரஷ்யா படிப்படியாக தனது நிலப்பரப்பை விரிவாக்கி வருகிறது.
இதனிடையே, எதிர்வரும் குளிர்காலம் உக்ரைனுக்கு பல சவால்களை உருவாக்கியுள்ளது. மின் விநியோக சேவைகள் நம்பகத்தன்மை குறைவாக உள்ளன. மேலும், புதிய அரசின் கீழ் அமெரிக்காவின் ஆதரவு குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia massive attack on Ukraine with 188 Drones, Russia Ukraine War