உக்ரைனை சூழ்ந்த 430 ட்ரோன்கள், 18 ஏவுகணைகள்: பதிலடி கொடுத்த ஜெலென்ஸ்கி
ரஷ்யா தனது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்
உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ரஷ்ய படைகள் தீவிரமான வான்வழித் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் ரஷ்யாவின் இந்த தாக்குதல் தலைநகர் கீவ்வின் முக்கிய உள்கட்டமைப்புகளான அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, மருத்துவமனை மற்றும் நிர்வாக கட்டிடங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது.
தலைநகர் கீவ்வில் 6 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதை அங்குள்ள நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், இரவு முழுவதும் ரஷ்யா கிட்டத்தட்ட 430 ட்ரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதலுக்கு உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |