உக்ரைனை இரவோடு இரவாக மொத்தமாக உலுக்கியெடுத்த ரஷ்யா
உக்ரைனின் மின்சார அமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய இராணுவம் இதுவரையில்லாத மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி உறுதி
ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்த இருப்பதாக இரு நாடுகளும் கூறியதையடுத்து, அண்டை நாடான போலந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது விமானப்படையை தயார் நிலைக்கு கொண்டுவந்தது.
குறித்த தாக்குதல் சம்பவத்தை உக்ரைன் ஜனாதிபதியும் உறுதி செய்துள்ளார். மொத்தம் 120 ஏவுகணைகள் மற்றும் 90 ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திச் சேவையான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் அதில் சுமார் 140 எண்ணிக்கையை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் வீழ்த்தியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தெற்கு உக்ரைனில் மைகோலைவ் பகுதியில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். எதிரி திட்டமிட்டே எங்கள் மின்சார அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளார், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இலக்கை தவறவிட்டுள்ளனர் என்றே ஜெலென்ஸ்கி சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கணக்கிடப்படவில்லை
இதனிடையே, தாக்குதல் குறித்த தகவல் வெளியானதும் போலந்து மற்றும் நட்பு நாடுகள் தங்கள் விமானப்படைகளை இயக்கும் நிலைக்கு தயாரானதாகவும், இறுதி உத்தரவுக்கு காத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தென்கிழக்கு நகரமான சபோரிஜியா மற்றும் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் விமானப்படை நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை வெளியிட்டது. இருப்பினும் தாக்குதலின் அளவு கணக்கிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
தலைநகர் உட்பட நாட்டின் பல பிராந்தியங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, குளிர்காலம் தொடங்கும் நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலை எதிர்பார்த்து பல வாரங்களாக உக்ரைன் எச்சரிக்கையுடன் இருந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |