உக்ரைன் மீது 2வது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்!
உக்ரைன் மீது ரஷ்யா 2வது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த வார இறுதியில் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலில் உள்ள கப்பல்களில் இருந்து உக்ரைன் மீது ஏவுகணைகளை ஏவியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரிமியா வான்வெளியில் இருந்து ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Igor Konashenkov கூறினார்.
இந்த தாக்குதல்கள் உக்ரைனின் ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்ததாக அவர் கூறினார்.
கலிப்ர் குரூஸ் ஏவுகணைகள் கருங்கடலிருந்து, மோதலில் சேதமடைந்த உக்ரேனிய கவச வாகனங்களை பழுது பார்த்து வரும் நிஜின் ஆலையை குறிவைத்து ஏவப்பட்டன என்று Konashenkov கூறினார்.
உக்ரைன் பயன்படுத்திய எரிபொருள் சேமிப்பு வசதியை அழிப்பதற்காக ஹைப்பர்சோனிக் கின்சல் ஏவுகணைகள் உட்பட மேலும் ஏவுகணைகள் கிரிமியாவிலிருந்து ஏவப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டுப் போராளிகள் உக்ரேனிய படைகளில் சேர்ந்த உக்ரைன் ராணுவ மையத்தைத் தாக்கியதாக ரஷ்ய தெரிவித்தள்ளது.
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைப்பதாக மேற்கத்திய கூற்றுக்களை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.