மொத்தம் 97,690 ரஷ்ய வீரர்கள்: கொத்தாக கொன்று குவித்த உக்ரைன் ராணுவம்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 97,690 ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய படைகளால் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் ராணுவ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
நீடிக்கும் உக்ரைன் போர்
உக்ரைன் போர் 11வது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்யா மற்றொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உக்ரைன் முதன்மை தளபதி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த வகையில் இராணுவ பயிற்சிகள் தீவிரமாக வழங்கப்பட்டு போருக்கு ஏற்ற வீரர்களாக தயார் படுத்தப்பட்ட 200,000 ரஷ்ய வீரர்களை, உக்ரைன் மீதான புதிய தாக்குதலில் பயன்படுத்த ரஷ்யா காத்து இருப்பதாக தளபதி Valery Zaluzhny தெரிவித்துள்ளார்.
EPA
அத்துடன் சமீபத்தில் ரஷ்ய அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி புடின், உக்ரைனில் அடுத்தக்கட்ட போர் முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து உள்ளார்.
97,690 வீரர்கள் கொலை
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 97,690 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
"All cruelty springs from weakness."
— Defense of Ukraine (@DefenceU) December 17, 2022
Seneca
Total combat losses of the enemy from Feb 24 to Dec 17: pic.twitter.com/PV9ljKEwR3
மேலும் உக்ரேனிய மதிப்பீடுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 420 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த கடந்த நாளில் மட்டும், குறைந்தது 5 டாங்கிகள், 6 கவச பாதுகாப்பு வாகனங்கள், 1 பீரங்கி அமைப்பு, 4 ட்ரோன்கள், 61 கப்பல் ஏவுகணைகள், 14 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள் மற்றும் 2 யூனிட் சிறப்பு உபகரணங்களை மாஸ்கோ இழந்ததாகக் கூறப்படுகிறது.