கீவ் நகரை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல்: ரஷ்ய படைகள் கொடுத்த பதிலடி
உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்திவாய்ந்த ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
குறிவைக்கப்பட்ட கீவ் நகரம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் தலைநகரான கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதாக உக்ரைனிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது தலைநகரின் பல பகுதிகளில் வெடி சத்தங்கள் கேட்டதாகவும், தொடர்ந்து வான் தாக்குதலுக்கான சைரன் ஒலிகள் கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், வணிக வளாகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் என பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் 7 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கீவ் நகர மேயர் வெளியிட்ட தகவலில், இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனிய ராணுவ நிர்வாகம் டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட முதற்கட்ட தகவலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மற்றும் தம்போவ் பகுதிகளில் உள்ள இ-காமர்ஸ் கிடங்குகளை உக்ரைனிய படைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் 8 பேர் உயிரிழந்ததுடன் பல உள்கட்டமைப்புகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |