உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா
உக்ரைன் மீது கிட்டத்தட்ட 400 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
பகல்நேர ட்ரோன் தாக்குதல்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டு படைகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரஷ்யா பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

எப்போதும் இரவு நேர ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்கும் ரஷ்யா, இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பகல் நேர வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது.
russians launched a drone attack on the centre of Lviv during broad daylight. The strike damaged buildings listed as UNESCO World Heritage Sites #russiaisaterroriststate pic.twitter.com/Lci6aYV65E
— Center for Countering Disinformation (@CforCD) March 24, 2026
இந்த தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகவும், நாட்டின் வான் பாதுகாப்பு படையினர் ட்ரோன்களை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டதாகவும் உக்ரைன் விமான படை செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ட்னிப்ரோன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தில் ட்ரோன் மோதியதில் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |