சூளுரைத்து பதிலடி கொடுத்த புடின்: கீவ் மீது 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள் தாக்குதல்
கீவ் நகரை ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அச்சுறுத்திய புடின்
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு உக்ரைனில் ஜெலென்ஸ்கியின் படை பாரிய தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுப்போம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அச்சுறுத்தினார்.
அதன்படி, கீவ் நகரை ரஷ்ய படை ஏவுகணை மற்றும் ட்ரோன் விமானம் மூலம் கடுமையாகத் தாக்கியது.
90 ஏவுகணைகள், 600 ட்ரோன் விமானங்கள்
இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
600 ட்ரோன் விமானங்கள் மற்றும் 90 ஏவுகணைகள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக விமானப்படை கூறியது.
அவற்றில் 549 ட்ரோன் விமானங்கள் மற்றும் 55 ஏவுகணைகளை இடைமறித்ததாகவும் தெரிவித்தது. ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யர்கள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அதிவேக ஒரெஷ்னிக் ஏவுகணையை ஏவியதாக கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |