இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா வேண்டுமென்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கீவ் நகரில் அமைந்துள்ள Kusum என்ற மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைனில் உள்ள Kusum என்ற மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைப்பிடித்து வருவதாக கூறி வரும் ரஷ்யா, இந்திய வணிகங்களின் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தி வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த மருந்துகளை அழித்து இருக்கிறது" என கூறப்பட்டுள்ளது.
பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்
இந்திய தொழிலதிபர் ராஜீவ் குப்தா என்பவருக்கு சொந்தமான Kusum நிறுவனம் மீதுதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான இதன் மீது நடந்த தாக்குதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |