உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதல் மழை : பதறவைக்கும் வீடியோ ஆதாரம்!
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் பின்பக்கத்தில் இருந்து ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர்ச்சியான ஷெல் தாக்குதல் தொடர்பான ட்ரோன் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் பிப்ரவரி 24 திகதி உக்ரைன் மீதான முழுநீள போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து இன்று 12 நாளாக உக்ரைன் மீதான ரஷ்ய போர் நடைபெற்று வருகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையே போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலும் தொடர்ந்து முன்நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
Russians attack Ukrainian military from behind the civilian population. On the footage you can see the shelling by MRLS "Hrad" recorded by our drone. The shelling was carried out directly from a village. pic.twitter.com/m2XSY4aNbs
— Повернись живим (@BackAndAlive) March 6, 2022
அந்த வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல் தொடர்பான ட்ரோன் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் உக்ரைன் மக்கள் குடியிருக்கும் கிராமப்பகுதியின் பின்பக்கத்தில் இருந்து ரஷ்ய ராணுவம் தனது ஏவுகணை ராக்கெட் தளம் மூலம் உக்ரைன் ராணுவத்தின் மீது தொடர் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் நடத்தி இருக்கும் இந்த தாக்குதல் உலகநாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் தற்போது வைரல் ஆகிவருகிறது.