மக்கள் குவிந்திருந்த ரயில் நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! பதபதைக்க வைக்கும் காட்சி
உக்ரைனில் மக்கள் காத்திருந்த ரயில் நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Donbass பகுதியில் உள்ள Kramatorsk ரயில் நிலையத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை Kramatorsk ரயில் நிலையத்தில் மக்கள் வெளியேற காத்திருந்து போது, இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலின் போது ரயில் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
Kramatorsk ரயில் நிலையம் மக்களை வெளியேற்ற உதவும் முக்கிய தளமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
போர்க்களத்தில் திருமண பந்தத்தில் இணைந்த உக்ரேனிய ராணுவ வீரர்கள்! வைரலாகும் புகைப்படம்
தாக்குதலை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள அவசர சேவைகள் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியேற காத்திருந்த மக்களில் பலர் அவர்களின் உடமைகள் அருகே சடலமாக கிடக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
????? - Frappe de missile Tockha U sur la gare de #Kramatorsk, ville industrielle située dans l’oblast de #Donetsk, ce matin.pic.twitter.com/5EGaqgEnVe
— ⓃⒺⓌⓈ—ⒾⓃⓉ·۰•●? (@NewsInt_) April 8, 2022
ஏற்கனவே, புச்சா நகரில் ரஷ்ய படைகள் பொதுமக்களை படுகொலை செய்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது Kramatorsk ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளது சர்வதேச அளவில் ரஷ்யா மீதான வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Another of #RussianWarCrimes.
— olexander scherba?? (@olex_scherba) April 8, 2022
Kramatorsk this morning.#Ukraine was evacuating civilians. #Russia struck. 30 dead. Their belongings still stand next to their bodies.#StopPutinNOW #StandWithUkraine #ArmUkraineNow pic.twitter.com/QQY5n4e2pc