பிரித்தானியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறிய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைன் பிரித்தானியாவின் விதிமுறைகளை மீறி ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் உக்ரேனிய நகரத்தில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரத்தில் தாக்குதல்
பிரித்தானியாவில் வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகள் தான் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரத்தில் உள்ள தொழில்துறை தளங்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
உக்ரேனிய விமானம் லுஹான்ஸ்கில் உள்ள ஒரு இரசாயன ஆலை மற்றும் இறைச்சி தொழிற்சாலையை Storm Shadows ஏவுகணைகளால் வெடிக்கச் செய்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Credit: Reuters
பிரித்தானியா வழங்கிய ஏவுகணைகள்
இந்த Storm Shadows (air-to-air) நீண்ட தூர ஏவுகணைகள் பிரித்தானியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களாகும்.
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கிய தொடங்கியதாக பிரித்தானிய வியாழக்கிழமை அறிவித்தது.
இதனை அறிவித்தபோது, பிரித்தானிய பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ், இந்த ஏவுகணைகளை உக்ரேனிய எல்லைக்குள் பயன்படுத்தப்படலாம் என்றும், ரஷ்யாவில் உள்ள இலக்குகளை நோக்கி அவை சுடப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் இருந்து உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
Storm Shadow missile photo: Cpl Mark Bailey/RAF via Reuters
லண்டனின் அறிக்கைகளுக்கு மாறாக...
இந்நிலையில், சிவிலியன் இலக்குகளுக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்ற லண்டனின் அறிக்கைகளுக்கு மாறாக, பிரித்தானியாவால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட Storm Shadows ஏவுகணைகள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், உக்ரைனின் Su-24 மற்றும் Mig-29 ரக போர் விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, பத்து மாத கால சண்டையைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு நகரமான பக்முட்டில் உள்ள ஒரு தொகுதியின் கட்டுப்பாட்டைப் பெற்றதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.