உக்ரைன் சுற்றி வளைக்கும் ரஷ்ய ஏவுகணைகள்: ரஷ்யா விடுத்த எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து இருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்யா இடையே மோதல் சமீபத்திய காலத்தில் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை மாலை உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான ஆபாய எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
உக்ரைனின் கண்காணிப்பு அமைப்புகள் வழங்கிய தகவலின் படி, ரஷ்யா MiG 31K போர் விமானத்தில் இருந்து அதிநவீன கின்சல்(kinzhal) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏவுகணைகள் கீவ் நகருக்கு மேற்கே உள்ள Zhytomyr மற்றும் Khmelnyskyi ஆகிய பகுதிகளை நோக்கி ஏவப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரான ஓடெசா மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் எச்சரிக்கை
ஏற்கனவே உக்ரைன் தலைநகரின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக ரஷ்யா எச்சரித்து இருந்த நிலையில் தற்போதைய இந்த தாக்குதலானது முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே, கீவ் நகரில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேறுமாறு ரஷ்யா அறிவுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |