ட்ரம்புடன் மோதல்... எலான் மஸ்கிற்கு ரஷ்யாவிலிருந்து வந்துள்ள அழைப்பு
ட்ரம்ப் எலான் மஸ்க் நட்பு குறுகிய காலகட்டத்திலேயே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அதை வைத்து ரஷ்ய தரப்பு கேலி செய்துவருகிறது.
எலான் மஸ்கிற்கு ரஷ்யாவிலிருந்து வந்துள்ள அழைப்பு
ட்ரம்ப், எலான் மஸ்க் மோதலை வைத்து ரஷ்ய தரப்பில் கலரும் கேலியாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுவருகிறார்கள். ’சண்டை போடாதீர்கள் guys’ என்கிறார் ரஷ்ய அலுவலர் ஒருவர்.
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவரான Dmitry Rogozin சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், எலான், வருத்தப்படவேண்டாம், அமெரிக்காவில் நீங்கள் பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் ரஷ்யாவுக்கு வாருங்கள்.
Elon @elonmusk , don't be upset! You are respected in Russia. If you encounter insurmountable problems in the US, come to us and become one of us - a "Bars-Sarmat" fighter. Here you will find reliable comrades and complete freedom of technical creativity.
— ROGOZIN (@Rogozin) June 6, 2025
உங்களுக்கு ரஷ்யாவில் நல்ல மரியாதை உண்டு. இங்கே உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தோழர்கள் கிடைப்பார்கள், தொழில்நுட்ப படைப்பாற்றலில் முழு சுதந்திரமும் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
In 2024, Elon Musk bet his entire $300B+ fortune on supporting Trump and helping save the US. 🚀
— Kirill A. Dmitriev (@kadmitriev) June 5, 2025
Today, Tesla crashed 14%. $150B gone. $30B wiped from Musk’s net worth.
No hedge. No fear. Just conviction.
Tomorrow?
அதேபோல, ரஷ்யாவில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் Kirill Dmitriev என்பவரும், மற்றும் பலரும் எலான் மஸ்குக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுபோன்று செய்திகளை வெளியிட்டு ட்ரம்ப், எலான் மஸ்க் மோதலை கேலி செய்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |