உக்ரைன் எல்லைக்கு அருகே இரத்த பொட்டலங்களை குவிக்கும் ரஷ்யா! வெளிச்சத்திற்கு வந்த முக்கிய தகவல்
உக்ரைன் எல்லைக்கு அருகே இரத்த பொட்டலங்களை ரஷ்ய குவித்து வருவதாக அமெரிக்க அதிரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உக்ரைன் எல்லைக்கு அருகே 1 லட்ச இராணுவ வீரர்கள ரஷ்யா குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மேற்கத்திய நாடுகள், தங்களால் முடிந்த ஆதரவை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகே இரத்த பொட்டலங்கள் உட்பட காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ரஷ்யா குவித்து வருவதாக பெயர் வெளியிட விரும்பாத 3 அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா தயாராக இருக்கிறது என்பதை வெளிகாட்டும் முக்கிய அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
இரத்த பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.