தலைநகர் மீது குறி... உக்ரைன் எல்லையில் சிறப்புப்படைகளை குவிக்கும் ரஷ்யா
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் வகையில் தமது எல்லையில் சிறப்பு வான்படையை முதன்முறையாக குவித்து வருகிறது ரஷ்யா.
ரஷ்யா- உக்ரைன் விவகாரம் நாளுக்கு நாள் இறுகி வரும் நிலையில், ரஷ்யா அடுத்தகட்ட நடவடிக்கையை சத்தமின்றி முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, ரஷ்யா போருக்கு தயாராகியுள்ளதை உலகிற்கு காட்டுவதாக அமைந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 250 வீரர்கள் வரையில் முதற்கட்டமாக ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாகவும், elite paratroopers எனப்படும் இவர்களை அனுப்பி வைத்திருப்பது என்பது மிகப்பெரிய திட்டமிடலின் ஒருபகுதி எனவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ரஷ்யாவின் குறி உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதுதான் எனவும் அதனாலையே elite paratroopers அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, 300 Javelin ஏவுகணைகளை உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. எதிரி நாட்டு டாங்கிகளை குறிவைத்து அழிக்கும் வகையில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும் இந்த Javelin.
மட்டுமின்றி Javelin ஏவுகணையால் கட்டிடங்களையும் தகர்க்கலாம் என்பதால், உக்ரைன் மீதான அடுத்தகட்ட நகர்வுக்கு ரஷ்யா 300 முறை யோசிக்க வேண்டும் என நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, உக்ரைனின் எல்லையில் இதுவரை டாங்கிகள் மற்றும் பீரங்கிகளுடன் சுமார் 127,000 துருப்புக்களை ரஷ்யா குவித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.