எண்ணெய் கப்பல்கள் விவகாரம்... அணு ஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்யா
ரஷ்ய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தொடர்ந்து கைப்பற்றிவரும் நிலையில், அணு ஆயுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இராணுவ ரீதியான பதிலடி
ரஷ்ய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றிவருவது திட்டமிட்ட கடற்கொள்ளை என அந்த நாடு குற்றஞ்சாட்டியுள்ளதை அடுத்து, அமெரிக்காவும் ரஷ்யாவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் டுமா பாதுகாப்பு குழுவின் முதல் துணைத் தலைவரான Aleksey Zhuravlyov எண்ணெய் கப்பல்கள் விவகாரத்தில் தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், வெனிசுலா விவகாரத்தில் ட்ரம்பின் நடவடிக்கைகளையும் சாடியுள்ளார்.
ரஷ்யா ஒரு இராணுவ ரீதியான பதிலடியை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், டார்பிடோக்களைக் கொண்டு தாக்குதல் நடத்த வேண்டும் அல்லது சில அமெரிக்க கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என்றார்.
ஆயுதம் ஏந்திய அமெரிக்க கடற்படையால் ஒரு பொது பயன்பாட்டிற்கான கப்பலைக் கைப்பற்றுவது என்பது கடற்கொள்ளைக்குச் சற்றும் குறைவானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த எண்ணெய் கப்பல் ரஷ்ய தேசியக் கொடியை ஏந்தியிருந்ததால், இது அடிப்படையில் ரஷ்யப் பிரதேசத்தின் மீதான தாக்குதலுக்குச் சமமானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
--- US European Command
இராணுவக் கோட்பாடு
மேலும், இந்த விவகாரத்தில் நாம் உறுதியாகவும் விரைவாகவும் பதிலளிக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ள Aleksey Zhuravlyov, அத்தகைய தாக்குதலுக்குப் பதிலடியாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் ரஷ்யாவின் இராணுவக் கோட்பாடு கருத்தில் கொள்கிறது என்றார்.
---Reuters
அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு வாரங்களாக நடந்த ஒரு தீவிரமான தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் மரைனரா எண்ணெய் கப்பகைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் கடும் கோபத்தில் பதிலளித்துள்ளனர்.
சட்டவிரோதமாக பயன்பாட்டில் இருந்த அந்த எண்ணெய் கப்பல் தற்போது அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது விளாடிமிர் புடினுக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகவே பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |