ட்ரம்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்! உக்ரைனில் 12 பேர் மரணம்
கிழக்கு உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா நடத்திய சரமாரி தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
ட்ரம்ப் அச்சுறுத்தல்
உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சி வருகிறார்.
அதே சமயம் அமைதி ஒப்பந்தத்தை எட்டும்வரை, ரஷ்யா மீது புதிய தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது குறித்து ஆலோசிப்பதாக கூறி அச்சுறுத்தினார்.
இந்த நிலையில், வெள்ளைக்கிழமை பிற்பகுதியில் உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபிலியாவின் மையத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ஒரே இரவில் நடத்தப்பட்ட இந்த சரமாரி வான்வழித் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என்றும், 30 பேர் காயமடைந்தனர் என்றும் தி எமெர்ஜென்சி சர்வீஸ் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலி
அத்துடன் Bohodukhiv நகரில், சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என்று, கார்கிவ் பிராந்திய ராணுவத் தலைவர் Oleh Syniehubov தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை அன்று, உக்ரைன் வெளியுறவு செயலர் ஆன்ட்ரி சிபிஹா உடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர் மூன்று ஆண்டுகால போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |