ரஷ்யாவுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொடுக்கிறதா வட கொரியா? குற்றச்சாட்டுக்கு அதிரடி பதில்
ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் அனுப்புவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு.
வட கொரியா திட்டவட்டமாக மறுப்பு.
ரஷ்யாவுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை அனுப்பி வருவதாக வெளியான குற்றச்சாட்டை வட கொரியா மறுத்துள்ளது.
இது குறித்த குற்றச்சாட்டை அமெரிக்கா முன் வைத்தது.
இது தொடர்பாக அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வெளிவிவகாரப் பிரிவு துணை இயக்குநா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான ஆயுத பேரம் குறித்து அமெரிக்கா அண்மையில் சில தகவல்களை வெளியிட்டது.
eastasiaforum
இது, முகாந்திரமற்ற வதந்தியாகும்.
ஆயுத வா்த்தகம் தொடா்பாக எங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை, அத்தகைய ஒப்பந்தம் இனியும் மேற்கொள்ளப்படாது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.