டிரம்பின் முயற்சிக்கு ரஷ்யா செவி சாய்ப்பது இல்லை: இது தான் ஒரே வழி: ஜெலென்ஸ்கி கருத்து
அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சுக்கு ரஷ்யா செவி சாய்க்கவில்லை என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா செவி சாய்க்கவில்லை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் முடிவில்லாமல் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தைக்கு தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. ஆனால் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி பேச்சுவார்த்தை அழைப்புகளுக்கும் ரஷ்யா செவி சாய்க்கவில்லை என ஜெலென்ஸ்கி சுட்டிக் காட்டியுள்ளார்.
அதே சமயம் டிரம்பின் போர் நிறுத்த முன்மொழிவுகளை உக்ரைன் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உக்ரைனை வலுப்படுத்த PURL திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதிப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் தான் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |