16.5 பில்லியன் டொலர்! ரஷ்யாவின் முதல் அணுமின் நிலைய ஒப்பந்தம் கையெழுத்து
கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைக்க ரஷ்யா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அணுசக்தி உற்பத்தி
ரஷ்யா உலகின் முன்னணி யுரேனிய உற்பத்தியாளராக உள்ளது. ஆனால், சொந்தமாக அணுசக்தி உற்பத்தியை செய்யவில்லை.

ஆகையால், 2024ஆம் ஆண்டு மத்திய ஆசியக் குடியரசான கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைக்க ஒப்புதல் வாக்கெடுப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, புதிய ஆலை பால்காஷ் ஏரிக்கரையில் பகுதியளவு கைவிடப்பட்ட உல்கென் கிராமத்திற்கு அருகே கட்டப்பட உள்ளது.
ரஷ்யாவும், கஜகஸ்தானும் கையெழுத்து
இந்த நிலையில், முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், கஜகஸ்தானும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.

அரசுமுறைப் பயணத்தின் இரண்டாம் நாளில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவிற்கும் இடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
தங்கள் நாட்டில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு ஆதரவளித்ததற்காக புடினுக்கு ஜனாதிபதி டோகாயேவ் நன்றி தெரிவித்தார்.
புதிய ஆலையின் 85 சதவீத நிதியை ரஷ்யா வழங்கும் என்று கஜகஸ்தான் எதிர்பார்க்கிறது. இது சுமார் 2035-2036ஆம் ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 16.5 பில்லியன் டொலர் செலவில் இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |