ஆசிய நாடுகளுக்கு 40 சதவீத தள்ளுபடியில் எரிவாயு... ரஷ்யாவின் பலே திட்டம்

Liquefied Petroleum Gas Russian Federation
By Arbin Apr 10, 2026 07:39 PM GMT
Report

அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான தங்களது எரிவாயு நிலையங்களிலிருந்து, தெற்காசிய நாடுகளை எரிவாயுவை வாங்க ஊக்குவிப்பதன் மூலம், உலகளாவிய இயற்கை எரிவாயு பற்றாக்குறையை ரஷ்யா தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முயல்கிறது.

எரிவாயு விநியோகம்

வெளியான தகவலின் அடிப்படையில், சீனா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த, அதிகம் அறியப்படாத இடைத்தரகு நிறுவனங்கள் வழியாக, கடந்த வாரம் சந்தை விலையில் இருந்து 40 சதவீதம் தள்ளுபடியில் எரிவாயு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆசிய நாடுகளுக்கு 40 சதவீத தள்ளுபடியில் எரிவாயு... ரஷ்யாவின் பலே திட்டம் | Russia Offers Discount On Gas

மட்டுமின்றி அந்த எரிவாயு ஓமன் அல்லது நைஜீரியா போன்ற ரஷ்யா அல்லாத நிலையங்களிலிருந்து வந்தவை போல் ஆவணங்களைத் தங்களால் வழங்க முடியும் என்றும் விற்பனையாளர்கள் கூறியதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதாலும், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி ஆலை மீதான தாக்குதல்களாலும் உலகளாவிய எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், உலகளாவிய ஏற்றுமதிகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு தடைபட்டுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், கத்தாரில் இருந்து வரும் கப்பல்கள் முற்றிலுமாக நின்றுவிட்டதால், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் அதிக விலை கொண்ட மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கப்பல்களுக்குச் சிறப்பு கட்டணம்... உடனடியாகக் கைவிட ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

கப்பல்களுக்குச் சிறப்பு கட்டணம்... உடனடியாகக் கைவிட ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

கடந்த ஆண்டு தனது LNG தேவையின் 60 சதவீதத்தை கத்தாரிடமிருந்து பெற்ற வங்காளதேசம், உடனடி சந்தையிலிருந்து சரக்குகளை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனால், கத்தார் உடனான தனது நீண்டகால ஒப்பந்தங்களின்படி செலவழிக்க வேண்டிய தொகையை விட, சில சமயங்களில் ஏறக்குறைய இரு மடங்கு அதிகமாகச் செலவழிக்க நேரிடுகிறது.

ஈரானிய எண்ணெய்

LNG விநியோகம் குறைந்ததன் காரணமாக, வங்கதேசம் மற்றும் இந்தியாவும் உரத் துறைக்கான எரிவாயு விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.

தடைசெய்யப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதில் இந்தியா வரலாற்று ரீதியாகவே எச்சரிக்கையாக இருந்து வருகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட திட்டங்களிலிருந்து ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) வாங்கப்போவதில்லை என்றும் இந்தியா முன்பே கூறியுள்ளது.

ஆசிய நாடுகளுக்கு 40 சதவீத தள்ளுபடியில் எரிவாயு... ரஷ்யாவின் பலே திட்டம் | Russia Offers Discount On Gas

இருப்பினும், கடந்த மாதம் அமெரிக்க கருவூலத்துறை வழங்கிய, கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பொது உரிமத்தைத் தொடர்ந்து, இந்தியா சமீபத்தில் 2019-க்குப் பிறகு தனது முதல் ஈரானிய எண்ணெய் இறக்குமதியை முன்னெடுத்துள்ளது.

ரஷ்யா தனது வாடிக்கையாளர் தளத்தைப் பல்வகைப்படுத்தவும், 'Arctic LNG 2' போன்ற தடைகளுக்கு உட்பட்ட நிலையங்களிலிருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், சீனா அல்லாத பிற நாடுகளுக்குத் தனது LNG விநியோகத்தை விரிவுபடுத்தவும் முற்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US