பழிக்குப் பழி... பிரித்தானிய தூதரை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ள ரஷ்யா
ரஷ்ய தூதரக அலுவலர் ஒருவர், பிரித்தானியாவில் உளவாளியாக செயல்பட்டதால் அவரை பிரித்தானியா வெளியேற்றிய நிலையில், பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, பிரித்தானிய தூதரக அலுவலர் ஒருவரை, ஒரு வாரத்துக்குள் மாஸ்கோவிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது
ரஷ்ய தூதரக அலுவலரை வெளியேற்றிய பிரித்தானியா
ரஷ்ய தூதரான Col Maxim Elovik என்பவர், அங்கீகரிக்கப்படாத ராணுவ உளவுத்துறை அலுவலராக செயலாற்றியதாகக் கூறி, கடந்த வாரம் அவரை பிரித்தானியா வெளியேற்றியது.
பதிலுக்கு, பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, Capt Adrian Coghill என்னும் பிரித்தானிய தூதரை ஒரு வாரத்துக்குள் மாஸ்கோவிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
Getty Images
பழிக்குப் பழி
ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து விமர்சித்த பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சரான Grant Shapps, ரஷ்ய தூதரக அலுவலர் பிரித்தானியாவில் உளவாளியாக செயல்பட்டதால் அவரை பிரித்தானியா வெளியேற்றியது.
ஆனால், பிரித்தானிய தூதரக அலுவலரை ரஷ்யா வெளியேற்ற ஒரே காரணம், பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது என்பதால்தான் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |