ரஷ்யாவின் இரவு நேர வான்வழி வேட்டை: உக்ரைனின் தரவு, தளவாட மையங்கள் குறி வைப்பு
Russia Overnight Attack on Ukraine Communication Hubs: உக்ரைனின் தகவல் மற்றும் தளவாட மையங்களை குறிவைத்து இரவோடு இரவாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் இரவு நேர தாக்குதல்
நேற்று இரவு தொடர்ச்சியாக உக்ரைனிய தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள இராணுவ தளவாட மையங்கள், விநியோக வழிகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக தாக்கியதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
தகவலின் படி, கீவ்வில் உள்ள கோஸ்மோநோவா தரவு செயலாக்க மையம் மீது இந்த தாக்குதலானது முக்கியமாக நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனிய இராணுவத்தினர் பயன்படுத்தும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பு வலைப்பின்னல்களுக்கு இந்த தரவு செயலாக்க மையம் முக்கிய ஆதரவு இடமாக செயல்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அத்துடன் ராணுவ உபகரணங்களை சேமித்துவ் வைக்க பயன்படுத்தப்பட்ட ஒடேசாவில் உள்ள நோவா போஷ்டா தளவாட மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒடேசாவின் வில்கோவ் துறைமுக வசதி மீது கூடுதலாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நிலப்பரப்பு தாண்டி கருங்கடலில் இயங்கி வந்த உக்ரைனின் உலர் சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி இருப்பதை ரஷ்ய படைகள் உறுதிப்படுத்தியுள்ளன.