உக்ரைனில் இரவோடு இரவாக வான் தாக்குதல்: இடைமறித்து அழித்த வான் பாதுகாப்பு அமைப்புகள்
கீவ் மீது ரஷ்யா நடத்திய இரவு நேர தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கீவ் மீது தாக்குதல்
உக்ரைனிய தலைநகர் கீவ் உட்பட பல பிராந்தியங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய பயங்கரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய நடத்திய இந்த தாக்குதலை சனிக்கிழமை கீவ் நகர ராணுவ நிர்வாக தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதில் குடியிருப்பு கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்து இருப்பதுடன் மழலையர் பள்ளி ஒன்றின் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது.
Dnipropetrovsk நகரத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்து இருப்பதுடன், தலைநகர் கீவ்வில் குறைந்தது 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இடைமறித்த வான் பாதுகாப்பு அமைப்புகள்

இரவு முழுவதும் பரவலான வான்வழித் தாக்குதல் இருந்தாலும் அவற்றை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாகவும் டெலிகிராம் பக்கத்தில் வெளியான தனி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உக்ரைனை குறிவைத்து ஏவப்பட்ட 9 ஏவுகணைகளில் 4 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து இருப்பதாகவும், ஏவப்பட்ட 62 ட்ரோன்களில் 50-ஐ சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |