எல்லைத் தாண்டிய 86 ரஷ்ய ட்ரோன்கள்: தடுக்க முடியாமல் திணறிய உக்ரைனிய படைகள்
உக்ரைன் வான் பரப்பிற்குள் ரஷ்ய படைகள் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனை சூழ்ந்த ரஷ்ய ட்ரோன்கள்
திங்கட்கிழமை உக்ரைனின் வான் பரப்பிற்குள் ரஷ்யா அத்துமீறிய பாரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் மொத்தம் 86 ஆளில்லா ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.

டெலிகிராமில் இது தொடர்பான தகவலை பகிர்ந்துள்ள உக்ரைன் ராணுவம், ரஷ்யா ஷாஹெட் மற்றும் கெர்பர் போன்ற ட்ரோன்களுடன் அடையாளம் தெரியாத ட்ரோன்களையும் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
குறிவைக்கப்பட்ட இடங்கள்
பல்வேறு பகுதியில் இருந்து ரஷ்யா தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பாக ஓரல், மில்லெரோவா மற்றும் ப்ரிமோர்ஸ்கோ அக்தார்ஸ்க் போன்ற இடங்களில் இருந்து ரஷ்யா தனது ட்ரோன்களை ஏவி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 86 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில் அவற்றில் 59-ஐ உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக சுட்டி வீழ்த்தி விட்டதாக தெரிவித்துள்ளது.
அதையும் மீறி உள்ளே புகுந்த 26 ட்ரோன்கள் உக்ரைனின் 12 பல்வேறு பகுதிகளை தாக்கி சேதம் ஏற்படுத்தி இருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |