விளாடிமிர் புடின் மீதான கைது வாரண்ட் குறித்து அச்சத்திலிருக்கும் ரஷ்யா
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புடின் கைது வாராண்ட் கொடுத்ததை அடுத்து, ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் அச்சத்திலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புடின் மீது வழக்கு
ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது கடந்த மாதம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வழக்கு தொடுத்தது. கடந்த பிப்ரவரி 2022ல் ரஷ்யாவால் தாக்கப்பட்ட உக்ரைன் நாட்டு குழந்தைகளை நாடு கடத்தியது போன்ற வேறு சில குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தியுள்ளது.
@cnn
இந்நிலையில் கடந்த மார்ச் 17 அன்று வெளியிடப்பட்ட நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டில், புடின் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி அலுவலகத்தில் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவா ஆகியோரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகள் புடின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கையையும் மறுத்துள்ளனர்.
அச்சத்தில் மூத்த அதிகாரிகள்
வாரண்ட் அளிக்கப்பட்ட பின்பு, ரஷ்யாவின் தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க ஊழியர்கள் தி மாஸ்கோ டைம்ஸ் என்ற ரஷ்ய ஊடகத்திடம், புடின் கைது வாரண்ட் பற்றி விவாதிக்க ரஷ்யா அரசு ஒரு சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளனர்.
@ap
இதுதொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறுகையில், ’ரஷ்யாவில் புடின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தப்பி வருகிறார். மேலும் ரஷ்ய அரசு அவரை ஐசிசியிடம் ஒப்படைக்கும் வாய்ப்பும் இல்லை. அவர் ரஷ்யாவில் இருக்கும் வரை கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ள போவதில்லை.
@moscow times
இருப்பினும், திரு புடின் ரஷ்யாவை விட்டு வெளியேறினால் அவர் கைது செய்யப்படலாம், எனவே அவர் தனது பயணத்தை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக அவருக்கு எதிரான சர்வதேச தடைகள் காரணமாக, அவரை விசாரணைக்கு உட்படுத்த விரும்பும் ஒரு நாட்டுக்கு அவர் செல்வது சாத்தியமில்லை’ என தெரிவித்துள்ளது.