ரஷ்ய இராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்படும் உக்ரைனிய மக்கள்
உக்ரேனியர்களை ரஷ்யப் படைகளில் சேர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் 60-வது நாளை எட்டியுள்ள நிலையில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தரை நிலை குறித்த சமீபத்திய உளவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் முக்கிய புலனாய்வு இயக்குநரகம் மற்றும் பொதுப் பணியாளர்கள் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன், கெர்சன் மற்றும் சபோரிஜியா ஆகிய பகுதிகளில் இருந்து உக்ரைன் குடிமக்களை தனது இராணுவத்தில் சேர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரேனிய குடிமக்களை ரஷ்ய ஆயுதப் படையில் சேர்ப்பது நான்காவது ஜெனிவா ஒப்பந்தத்தின் 51 வது பிரிவை மீறுவதாக பிரித்தானிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்ய சட்டத்தின்படி மக்கள் தானாக முன்வந்து தனது ஆயுதப்படையில் சேர்ந்ததாக ரஷ்யா முன்வைத்தாலும் நான்காவது ஜெனிவா ஒப்பந்தத்தின் 51-வது பிரிவு மீறப்படும்.
"பாதுகாக்கப்பட்ட நபர்கள்" (protected persons) என்பது போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களைக் குறிக்கிறது என்று பிரித்தனைய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டது.