உக்ரைன் பகுதியில் காலரா பரவல்: பகீர் கிளப்பும் ரஷ்யாவின் கொடூர திட்டம்
ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துவரும் கிழக்கு உக்ரைனில் பொதுமக்களுக்கு காலரா பாதிப்பு கண்டறிந்த நிலையில் ரஷ்யாவின் கொடூர திட்டம் அம்பலமாகியுள்ளது.
கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்யா தற்போது கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. தலைநகர் கீவ், மரியுபோல், புச்சா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திடீரென்று பின்வாங்கிய ரஷ்ய துருப்புகள், கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் பொதுமக்களுக்கு காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பீதியை கிளப்பியுள்ளது. இது பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், உயிரியல் ஆயுதத்தை உக்ரைன் பயன்படுத்துவதாக பழிபோடும் ரஷ்யாவின் திட்டம் இதுவாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பொதுமக்கள் அதிகமாக திரண்டு, ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறி, காலரா நோயை பரப்பும் திட்டத்திற்கு ரஷ்ய அதிகாரிகள் தாயாராகி வந்ததாக உக்ரைன் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலரா பரவலுக்கு ரஷ்யா தான் பொறுப்பு என இதுவரை எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை என்றாலும், கெட்டுப்போன உணவு பண்டங்கள், நாள்பட்ட குடிநீர் உள்ளிட்டவை காலரா பரவலுக்கு காரணமாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, கிழக்கு உக்ரைனில் தற்போது பரவும் காலரா பாதிப்புக்கு பின்னால் ரஷ்யா இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த உள்ளூர்வாசிகள் ஒன்றாக ஒரே பகுதியில் தஞ்சம் புகுந்து, நெரிசலான தங்குமிடங்கள் காலரா போன்ற நோயைப் பரப்பும் அபாயத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பால் 24,200 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1062 ரஷ்ய டாங்கிகளை உக்ரைன் துருப்புகள் தாக்கி அழித்துள்ளன. இதற்கிடையில், 2,000 பொதுமக்கள் துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து வெளியேறத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.