சொந்த நாட்டிற்குள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த தயாராகும் ரஷ்யா! உளவுத்துறை பரபரப்பு தகவல்
ரஷ்யா அதன் பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறையின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 48வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்ய, இனி பேச்சுவார்ததைக்காக படையெடுப்பை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதன் நாட்டிற்குள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சிறப்பு சேவைகள், கண்ணிவெடிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குண்டுவீச்சு தாக்குதல்கள் மூலம் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடுகின்றன.
உங்களால் எங்களை ஒன்னும் செய்ய முடியாது! மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
அத்துடன் பெல்கோரோட் நகரம் அல்லது கிரிமியா நகரங்களில் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளன என்று உக்ரேனிய உளவுத்துறைத் தலைவர் கூறினார்.
உக்ரைனின் மதிப்பை சீர்குலைக்க இந்த பொய்யான தாக்குதல்களை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஆதரவை அதிகரித்து, உக்ரைன் மீதான தாக்குதல்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த ரஷ்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.