ட்ரம்பின் மிரட்டலுக்கு மத்தியில்... வெனிசுலாவிற்கு முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்த ரஷ்யா
கரீபியனில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளால் வெனிசுலாவில் எண்ணெய் கப்பல்கள் முற்றுகையிடப்படும் நிலையில், ரஷ்யா தனது முழு ஆதரவையும் தென் அமெரிக்க நாட்டிற்கு உறுதி செய்துள்ளது.
கடுமையான விளைவு
உக்ரைனில் 2022 பிப்ரவரி முதல் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யா, தற்போது அமெரிக்காவின் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக வெனிசுலாவிற்கு ஆதரவளித்துள்ளது.

தொலைபேசியில் தொடர்புகொண்ட இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், அமெரிக்காவின் நடவடிக்கைகளை மொத்தமாக விமர்சித்துள்ளனர்.
ஞ்சாயிறன்று வெனிசுலா தொடர்பில் மூன்றாவது எண்ணெய் கப்பலையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. கரீபியன் கடலில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து அமைச்சர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.
இது பிராந்தியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் வெனிசுலா நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் ரஷ்யத் தரப்பு தனது முழு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அச்சுறுத்தல் நடவடிக்கை
செப்டம்பர் மாதம் முதல், அமெரிக்கப் படைகள் கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறும் படகுகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில் சிலர் மீனவர்கள் என்று அவர்களது குடும்பத்தினரும் அரசாங்கங்களும் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டிசம்பர் 16 அன்று, வெனிசுலாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களை முற்றுகையிடப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், எண்ணெய் கடத்தலால் ஈட்டப்படும் தொகையில் போதைப்பொருள் பயங்கரவாதம், மனிதக் கடத்தல், படுகொலை மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை ஜனாதிபதி மதுரோ முன்னெடுப்பதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரோ ஆட்சியில் இருந்து வெளியேறினால் மட்டுமே வெனிசுலா மக்களுக்கு விடியும் என்றும் ட்ரம்ப் பேசி வருகிறார். இதனிடையே, அமெரிக்காவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை ஐநாவில் விவாதிக்க வேண்டும் என ரஷ்யா போன்று, வெனிசுலாவின் இன்னொரு நட்பு நாடான சீனாவும் கோரியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |