ஜெலென்ஸ்கியின் கண்டனம்..ட்ரம்ப் - ஜின்பிங்குடன் முத்தரப்பு சந்திப்பை கோரிய ரஷ்யா
Russia proposed putin trump and jinping meeting: புடின், ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் முத்தரப்பு சந்திப்பு நடத்த ரஷ்யா முன்மொழிந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியை வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக சாடியதைத் தொடர்ந்து, ரஷ்யா ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங்குடன் புடின் முத்தரப்பு சந்திப்பை நடத்த முன்மொழிந்துள்ளது.
ஜெலென்ஸ்கி சாடல்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் குறித்து முன்கூட்டியே நட்பு நாடுகள் எச்சரிக்கவில்லை என்று ட்ரம்பை சாடினார்.
மேலும், தங்கள் நாட்டிற்காக வேறு யாராவது பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் விளாடிமிர் புடின் (Vladimir Putin) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்மொழிந்துள்ளது.
கிரெம்ளின் உறுதி
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த சந்திப்பிற்கான சாத்தியக்கூறுகளை ரஷ்ய ஜனாதிபதி எழுப்பியுள்ளார்.
அதேபோல் முத்தரப்பு சந்திப்பு நடைபெறக்கூடும் என்று கிரெம்ளின் திங்களன்று உறுதிப்படுத்தியது.
செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், சீனாவில் புடின் மற்றும் ஜி ஜின்பிங்கை சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதில் உக்ரைன் ஜனாதிபதி இருக்கமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
