பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு ரயில் பாதை - ரஷ்யா முன்மொழிவு
பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு நேரடி ரயில் பாதை அமைப்பதற்கு ரஷ்யா முன்மொழிந்துள்ளது.
ரஷ்யா இந்தியா இடையே ரயில் பாதை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையில் கப்பல்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைபட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த பாதிப்பை குறைக்கும் வகையில், இந்தியா உடன் ரயில் போக்குவரத்தை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின்(Marat Khusnullin), "இந்தியப் பெருங்கடலுக்கு ஒரு ரயில் இணைப்பு ஏற்படுத்துவது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.

போஸ்பரஸ் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அபாயங்கள் காரணமாக, துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக மாற்று வழிகள் தேவைப்படலாம். இந்தியாவிற்கு அணுகலை வழங்கும் எந்தவொரு வழியும் ஏற்றுக்கொள்ளத்தக்கது" என தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்ய எண்ணெயின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக மாறியுள்ளது. மேலும், இரு நாடுகளும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன.
ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவுகள் இல்லாததால் இந்த திட்டத்தினை முன்னெடுத்து செல்வதில் சிக்கல்கள் உள்ளது.

முன்னதாக 2024 ஆம் ஆண்டில், ரஷ்யா ஈரானைக் கடந்து செல்லும் INSTC வழித்தடத்தின் மூலம் 2 ரயில் பெட்டிகளில் நிலக்கரியை இந்தியாவிற்கு அனுப்பியது. ஈரானின் தெற்கு துறைமுகங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் காரணமாக அந்த வழித்தடம் தற்போது பயன்பாட்டில் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |