போரும் வேண்டாம் புடினும் வேண்டாம்! ரஷ்யாவை விட்டு வெளியேறிய ஆலோசகர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய ஆலோசகர் மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
உக்ரைனில் விளாடிமிர் புடினின் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய காலநிலை தூதர் அனடோலி சுபைஸ் (Anatoly Chubais) பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார் என்று நிலைமையை நன்கு அறிந்த இரண்டு நபர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக கிரெம்ளினுடனான உறவை முறித்துக் கொள்ளும் உயர்மட்ட அதிகாரியாக சுபைஸ் ஆனார்.
66 வயதான சுபைஸ், 1990-களின் பொருளாதார சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார், அவர் புடினின் அரசாங்கத்தில் இருந்தவர் மற்றும் மேற்கத்திய அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். அவர் பதவி விலக்கியது குறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உடனடியாக எதுவும் பதிலளிக்கவில்லை.
PC: Andrey Rudakov/Bloomberg via Getty Images
ரஷ்யாவின் 1990-களின் தனியார்மயமாக்கலின் கட்டிடக் கலைஞர் என்று அறியப்பட்ட சுபைஸ், 1990 களின் நடுப்பகுதியில் புடினுக்கு தனது முதல் கிரெம்ளின் வேலையை வழங்கினார், மேலும் அந்த தசாப்தத்தின் இறுதியில் அவர் அதிகாரத்திற்கு வந்ததை ஆரம்பத்தில் வரவேற்றார்.
ஜனாதிபதி புடினின் கீழ், சுபைஸ் கடந்த ஆண்டு நீடித்த வளர்ச்சிக்கான தூதராக அவரை நியமிக்கபட்டார். அதுவரை பெரிய அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார்.
செவ்வாய்க்கிழமை சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் சுபைஸ் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
PC: Mikhail Svetlov/Getty Images
கடந்த வாரம், டிமிட்ரி மெட்வெடேவின் மூத்த பொருளாதார ஆலோசகராகவும், 2018 வரை துணைப் பிரதமராகவும் இருந்த ஆர்கடி டுவோர்கோவிச் (Arkady Dvorkovich), உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து, அரசு ஆதரவு பெற்ற ஸ்கோல்கோவோ தொழில்நுட்ப நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தலைவரான டுவோர்கோவிச், போருக்கு எதிராக குரல் கொடுத்த சில முன்னாள் மூத்த அதிகாரிகளில் ஒருவர்.