புடின் இறந்துவிட்டதாக புரளியைக் கிளப்பியவர் இவர்தான்... வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிரிழந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
இதுபோன்ற செய்திகள் குறித்து கிரெம்ளின் வட்டாரம் பொதுவாக கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இந்த விடயம் குறித்து கிரெம்ளின் வட்டாரம் மூன்று முறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தி
இரண்டு வாரங்களுக்கு முன், புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அத்துடன், தற்போது ரஷ்யாவை ஆட்சி செய்வது புடினைப் போலவே தோற்றமளிக்கும் அவரது டூப் என்றும், அவரை பின்னாலிருந்து இயக்குவது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான Nikolai Patrushev என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அத்துடன், புடினுடைய ரகசியக் காதலியான அலீனா (Alina Kabaeva), அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியானது.
Image: Kommersant via Getty Images
புடின் இறந்துவிட்டதாக புரளியைக் கிளப்பியவர் இவர்தான்
அக்டோபர் மாதம் தடகள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலீனா, அதற்குப் பின் எங்கும் வெளியே தலைகாட்டவில்லை. இந்நிலையில், பேராசிரியர் Anthony Glees என்பவர், பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால், புடின் இறந்துவிட்டதாக கூறப்படும் நம்பத்தக்க புரளியை முதலில் கேட்ட நபர், அலீனாவைத் தவிர வேறு யாராகவும் இருக்கமுடியாது என்று கூறியுள்ளார் அவர்.
Image: Getty Images
முதன்முதலில் புடினிடம் அலீனாவைக் கவர்ந்த விடயம் என்னவாக இருக்கமுடியும்? அவர் ரஷ்யாவின் ஜனாதிபதி, உலக பணக்காரர்களில் ஒருவர் என்பதாகத்தானே இருக்கமுடியும். முழுவதும் பாலியல் எண்ணங்களால் நிறைந்தவர் என விமர்சிக்கப்படும் அலீனா கடைசியாக Valdai என்னுமிடத்திலுள்ள, புடினுடைய கோடை விடுமுறை மாளிகையில் காணப்பட்டார். அதற்குப் பின் அவர் மாயமாகிவிட்டார் என்றால், நாம் என்ன கணிக்கமுடியும்?
அலீனாவுக்கு இப்போது 40 வயதாகிவிட்டது, கொஞ்சம் குண்டாகிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், ஆக, கட்டுடலுடன் இருக்கும் பெண்களை விரும்பும் புடினுக்கு அலீனா சலித்துப்போயிருக்கலாம்.
Image: AFP via Getty Images
ஆகவே, தான் புறக்கணிக்கப்பட்டுவிட்டதால், புடினுக்கு உடல் நலமில்லை, அவர் இறந்துவிட்டார் என அலீனா புரளி கிளப்பியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் Anthony Glees.
ஹிட்லரின் மனைவிக்கு ஏற்பட்ட முடிவுதான் இவருக்கும்
ஆனால், உண்மையில் புடின் உயிருடன் இருப்பாரென்றால், ரஷ்யா எதிரிகளை பழிவாங்க, அவர்களை சைபீரியாவிலுள்ள உப்புச் சுரங்கங்களுக்கு அனுப்பிவிடுவதுபோல, அலீனாவை எச்சரிப்பதற்காக, அவரும் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டு, அமைதியாக்கப்படலாம்.
அல்லது, உண்மையாகவே புடின் இறந்திருப்பாரென்றால், தான் தலைமறைவாவது நல்லது என அலீனா முடிவு செய்திருக்கலாம். காரணம், புடின், ஹிட்லரின் நடவடிக்கைகளால் கவரப்பட்டவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். ஆகவே, ஹிட்லரின் காதலியான ஈவாவுக்கு ஏற்பட்ட முடிவே, அலீனாவுக்கும் ஏற்படலாம்.
HistoryExtra
1945ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி, தான் சிக்கிக்கொண்டேன், சாகப்போகிறேன் என்று தெரிந்ததும், ஹிட்லர் தனது காதலி ஈவா (Eva Braun), தனது செல்ல நாயாகிய Blondi, Unity Valkyrie Mitford என்னும் பிரித்தானிய பெண் முதலான தனது பெண் தோழிகள் பலர், மற்றும் தனது சகோதரியின் மகளான Geli Raubal ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |