தசையை உருக்கி எலும்பு வரை பாதிக்கும் பயங்கர வெடிகுண்டுகளை மழையாகப் பொழிந்த ரஷ்யா: பயங்கர காட்சி
உக்ரைன் நகரம் ஒன்றின்மீது, thermite bombs எனப்படும் பயங்கர குண்டுகளை மழைபோல் பொழிந்துள்ளது ரஷ்யா.
மனித உடலின் மீது பட்டால், தசையை உருக்கி எலும்பு வரை பாதிக்கக்கூடியவையாகும் இந்த குண்டுகள்.
உக்ரைன் நகரமான Marinka மீது, ரஷ்யா, thermite bombs எனப்படும் பயங்கர குண்டுகளை மழைபோல் பொழியும் பயங்கர காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வெளியாகியுள்ள காட்சிகளில், Donetsk பகுதியிலுள்ள அந்நகரம் மீது மழைபோல் அந்த பயங்கர குண்டுகள் வந்து விழுவதைக் காணலாம்.
Credit: Twitter
இந்த thermite bombs எனப்படும் பயங்கர குண்டுகள், உலோகத் தூள் மற்றும் உலோக ஆக்சைடு ஆகிய பொருட்களின் கலவையாகிய Thermite எனப்படும் கலவையால் உருவாக்கப்படுகின்றன.
வெடிக்கும்போது 2,400 டிகிரி செண்டிகிரேட் வரை வெப்பத்தை உமிழும் இந்த குண்டுகள், எஃகையும், காங்கிரீட்டையும் கூட தாண்டி நுழையும் திறன்கொண்டவையாகும்.
அவை மனித உடலில் படுமானால், தசையை உருக்கி எலும்பு வரை பாதித்துவிடும்.
தடை செய்யப்பட்ட அந்த குண்டுகளை பயன்படுத்துவது போர்க்குற்றம் எனக் கருதப்படும் நிலையிலும் ரஷ்யா அந்த வெடிகுண்டுகளை பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
Credit: Twitter