இந்த திசைகளிலிருந்து உக்ரைனை தாக்க ரஷ்யா படைகள் தயார்! பிரபல ஐரோப்பிய நாடு எச்சரிக்கை
எந்நேரத்திலும் உக்ரைனை தாக்க ரஷ்யா படைகள் தயாராக இருக்கிறது என பிரபல ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் முக்கிய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான லிதுவேனியா, நேட்டோ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா பிரச்னை குறித்து லிதுவேனியன் பாதுகாப்புத் தலைவர் Valdemaras Rupsys கூறியதாவது, ரஷ்யா இராணுவம் தயாராக இருக்கிறது, எனவே எந்நேரத்திலும் அது தாக்குதலை தொடங்கலாம், அவர்களுக்கு உத்தரவு மட்டும் வந்தால் போதும்.
ரஷ்யா படைகளை திரும்பப் பெறுவதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. ஆனால், கூடுதல் ஆயுதங்களுடன் படைகள் குவிக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகள் உள்ளது.
உக்ரைன் உடனான எல்லையில் இருந்து வெகு தூரத்தில் இருந்த ரஷ்யா படைகள், எல்லையை நோக்கி நகர தொடங்கியுள்ளன.
வடக்கு, கிழக்கு மற்றும் கிரிமியாவில் இருந்து தொற்கு பகுதியில் உக்ரைனை தாக்க ரஷ்ய படைகள் தயாராக இருக்கின்றன.
இந்த 3 திசைகளிலிருந்தும் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
முழுமையாக படையெடுப்பது முதல் சில பகுதிகளை கைப்பற்றுவது வரை அனைத்திற்கும் போதுமான படைகள் ரஷ்யாவிடம் உள்ளன.
உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் பால்டிக் குடியரசில் அதிக நேட்டோ அல்லது அமெரிக்க படைகளை குவிக்க வழிவகுக்கும் என்று Rupsys தெரிவித்துள்ளார்.