Cryptocurrency-யை அங்கீகரிக்கவுள்ள மிகப்பெரிய நாடு! புதிய சட்டம் வரவுள்ளதாக தகவல்..
Cryptocurrency-யை ரஷ்யா அரசு அங்கீகரித்து ஒழுங்குபடுத்தவுள்ளதாக உள்ளூர் ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய நாளிதழான Kommersant-ல் "ரஷ்யாவில் கிரிப்டோகரன்சிகளின் புழக்கத்திற்கான எதிர்கால பயன்பாட்டுக்கு அரசாங்கமும் ரஷ்ய வங்கியும் ஒப்புக் கொண்டுள்ளன.
பிப்ரவரி 18-க்கு முன், அவர்கள் ரஷ்ய கூட்டமைப்பில் டிஜிட்டல் நாணயங்களின் புழக்கத்தில் ஒரு வரைவுச் சட்டத்தை தயாரிப்பார்கள், அதில் கிரிப்டோகரன்சிகள் நாணயங்களின் அனலாக் என அங்கீகரிக்கப்பட உள்ளதாகவும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக CNBC தெரிவித்துள்ளது.
இது உண்மையாக இருந்தால், கடந்த மாதத்தின் பிற்பகுதியில் கிரிப்டோகரன்சிகள் மீதான தடைக்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் மத்திய வங்கியின் நிலைப்பாட்டில் இருந்து இது குறிப்பிடத்தக்க விலகலாக இருக்கும்.
ரஷ்ய ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டால், கிரிப்டோகரன்சிகளை வைத்திருப்பது மட்டுமே நாட்டில் சட்டப்பூர்வமாக்கப்படும் என்றும் அதைக் கொண்டு மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று கூறப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் கிரிப்டோகரன்சிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளது. ஆனால் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை நாட்டில் உள்ள அதிகாரிகள் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
அப்படி ஒருவேளை சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது 2022-ன் பிற்பகுதியில் அல்லது 2023-ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைமுறைக்கு வரலாம் என்று Kommersant-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 600,000 ரூபிள்களுக்கு மேல் (சுமார் 8,000 அமெரிக்க டொலர்) கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக அறிவிக்கப்படலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.