வெளியானது... நடுக்கடலில் பிரித்தானியா போர்க்கப்பலை ரஷ்ய இராணுவம் சுற்றி வளைத்து விரட்டியடித்த பரபரப்பு வீடியோ
பிரித்தானியா போர்க்கப்பலை விரட்டியடித்த பரபரப்பு காட்சியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 23ம் திகதி கருங்கடலில் எல்லையை மீறி நுழைந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் HMS Defender போர்க்கப்பலை ரஷ்ய இராணுவம் விரட்டியடித்தது.
பிரித்தானியா போர்க்கப்பலை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் ஈடுபட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின் போது பிரித்தானியா போர்க்கப்பலை எச்சரிக்கும் விதமாக ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கப்பல் பயணிக்கும் பாதையில் போர் விமானத்திலிருந்து குண்டு போட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
ஆனால், எச்சரிக்கும் விதமாக HMS Defender மீது எந்தவித துப்பாக்கிச் சூடும் நடத்தப்படவில்லை.
பிரித்தானியா கடற்படை கப்பல் சர்வதேச சட்டத்தின்படி உக்ரேனிய பிராந்திய கடல் வழியாக அமைதியாக பயணித்து வருகிறது என பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், பிரித்தானியா அளித்த தகவலை பொய்யாக்கும் வகையில் கருங்கடலில் HMS Defender-ஐ ரஷ்ய போர் விமானம் மற்றும் போர்க்கப்பல் விரட்டியடித்த காட்சிகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
This video has been released by the Russian Defence Ministry which says it shows HMS Defender being circled by military aircraft and followed by vessels.
— Sky News (@SkyNews) June 24, 2021
Read more here: https://t.co/Jh343tNZ3O pic.twitter.com/WckVMlCenV