சாலையில் எதிர் எதிரே மோதிக்கொண்ட 3 வாகனங்கள்: ரஷ்யாவில் 12 பேர் உயிரிழப்பு
Russia’s Arkhangelsk Multi Vehicle Crash 12 Dead: ரஷ்யாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மோதிக்கொண்ட 3 வாகனங்கள்
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆர்காங்கெல்ஸ்க்(Arkhangelsk) மாகாணத்தில் நடந்த கோரமான சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த சாலை விபத்தில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் தகவலை மேற்கோள் காட்டி RIA வெளியிட்ட செய்தியில், மினி பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது முந்திச் செல்ல முயன்ற மினி பேருந்தானது, எதிரே மரக்கட்டை ஏற்றி வந்த லொறி மற்றும் காரை ஒன்றின் மீது மோதியது.
விபத்து குறித்து தகவலறிந்த அவசர கால மீட்பு குழுவினர், விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்துக்கான பின்னணி காரணங்களை முழுமையாக கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |