உக்ரைன் மீது ரஷ்யா கொடூர ஏவுகணை தாக்குதல்: 4 பேர் வரை உயிரிழப்பு
ரஷ்யாவின் கொடூர ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் டினிப்ரோ நகரில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது தாக்குதல்
உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டினிப்ரோ மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ராக்கெட் தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 40 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ரஷ்யாவின் இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ காட்சி ஒன்றில், டினிப்ரோ நகரின் நெடுஞ்சாலை அருகே பெரிய வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த தாக்குதலில் அலுவலக கட்டிடம், பல வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதமடைந்து இருப்பதும் பார்க்க முடிகிறது.
தாக்குதலுக்கு உள்ளான டினிப்ரோ நகரம் முன்னணி போர் களத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |