உக்ரைன் நோக்கிய பாய்ந்த 731 வான்வழித் ஆயுதங்கள்: தலைநகர் கீவ் மீது வைக்கப்பட்ட குறி
உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
பிரம்மாண்ட வான்வழித் தாக்குதல்
வியாழக்கிழமை அதிகாலை உக்ரைனிய நகரங்களை குறிவைத்து 731 வான்வழித் ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யா பிரம்மாண்ட தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த தாக்குதலில் உக்ரைனிய தலைநகரான கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க், ஓரல், லிபெட்ஸ்க் போன்ற மூலோபாய பிராந்தியங்களில் இருந்து இந்த தாக்குதலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்
ரஷ்யாவின் இந்த மிகப்பெரிய அளவிலான தாக்குதலில் Kinzhal ஏரோபாலிஸ்டிக் ஏவுகணைகள் Iskander -M/S-400 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் kh-101 குரூஸ் ஏவுகணைகள் ஆகிய உள்ளடக்கிய 56 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் shahed, கெர்பெரா, இடால்மாஸ் மற்றும் பரோடி வகைகளை சேர்ந்த 675 ட்ரோன்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் இந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைனிய படைகள் மிக திறமையாக எதிர்கொண்டன.
ஏவப்பட்ட 731 வான்வழித் தாக்குதலில் உக்ரைனிய படைகள் 693 வான்வழி ஆயுதங்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |