துவங்கியது ரஷ்யாவின் பழிவாங்கும் படலம்: பின்லாந்துக்கு மின்சாரம் கட்!
பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தால் பழிவாங்கும் நடவடிக்கைகள் துவங்கும் என எச்சரித்திருந்தார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்.
அவர் சொன்னதுபோலவே, ரஷ்யாவின் பழிவாங்கும் நடவடிக்கைகள் துவங்கியாயிற்று எனலாம்.
ஆம், பின்லாந்துக்கு ரஷ்யாவிலிருந்து வரும் மின்சாரம், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.00 மணியிலிருந்து நிறுத்தப்படுவதாக பின்லாந்தின் மின்சாரம் வழங்கும் அமைப்பான RAO Nordic நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் வழங்குதல் நிறுத்தப்படுவதாக ரஷ்ய தரப்பு கூறினாலும், உண்மையான காரணத்தை உலகமே அறியும்.
இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து வரும் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும், அதை ஈடு செய்ய ஸ்வீடனிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்றும், உள்ளூரிலேயே மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் பின்லாந்து தெரிவித்துள்ளது.