1600 ட்ரோன்களை வீழ்த்தி..மிகப்பெரிய தாக்குதல் முறியடிப்பு - ரஷ்யா
Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி, மிகப்பெரிய தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மிகப்பெரிய தாக்குதல்
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இடையே, மாஸ்கோ பகுதியில் உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், "1600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதன் மூலம், மிகப்பெரிய உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. பல ட்ரோன்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை அடைந்தன.
அவற்றில் ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பு மீது தாக்கியது. தேர்தல்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், எதிரி இதை சாதிக்க தவறிவிட்டார்" என்றார்.
